பாலைப் பூக்கள் பின்னூட்டம்
திருமதி. சுவர்ணா சபரிக்குமார்
வணக்கம்.
‘மஸ்கட் கவிஞர்’
திரு. மு. பஷீர் அவர்களின் கவிதைத் தொகுப்பான ‘பாலைப் பூக்கள்’ நூலைப்
படிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்துமகிழ்ச்சியடைகிறேன். பாலைப் பூக்களின் தேன்
துளிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்வதில் அம்மகிழ்ச்சிஇரட்டிப்பாகிறது.
திரு.பஷீர் அவர்களின் மேடைப்
பேச்சுகளைமட்டுமே கேட்டிருந்த நான் இவரின் கவிதைகளில் முதன்முதலாக வாசித்தது ‘கூவாத குயில்கள்’.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரு நங்கைகளைப்பற்றிய ஒரு
செய்தித் தொகுப்பின் விளைவாக விளைந்தகவிதை.
"கடவுளின் படைப்பில் கணக்குப் பிழை...
கூட்டலும் இன்றிக்
கழித்தலும்அன்றி நடுநிலைக்
குறி"
என்ற இவரின் வரிகள் இதயத்தைத் தைக்கின்றன !.
வந்தோரை வாழ வைக்கும் வளைகுடாவைப்
பற்றிஎழுதுகையில்,
"அரபுப் பாலை பால் அமுதம் வழியும்
அன்புத் தாய்
முலை"
என்று இம்மண்ணை அன்னையாகப் போற்றுகிறார்.
இயற்கையைப் பற்றிய இவரின் சிந்தனைகளில்
ஒன்றைக்குறிப்பிட விரும்புகின்றேன்.
பயணங்களின் போது குலுக்கம் தெரியாமல்இருக்க
நாம் சொகுசு வண்டிகளை நாடுகிறோம். இயற்கையோ, பூமியின் சுழற்சிப் பயணங்களின்
போதுநம்மைக் காற்றுத் தலையணை கொண்டு காப்பதாகக்கூறும் சிந்தனை அபாரம்.
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுதும்போது,
" வேட்டியின் விளிம்பினை
விரல் பிடித்து நீ நடந்தால்,
பாட்டின் வரிகள் உன் கைப்பிடித்து
வருமே அழகு”
எனும் போது அந்த அழகு நம் மனக் கண்களில்
விரிகிறது.
‘கணவன்’ என்ற
தலைப்பில் ஒருமாதாந்திர இதழுக்கு நாங்கள் இருவருமே கவிதைகளைஅனுப்பினோம். இருவரின்
கண்ணோட்டத்திலும் தான்எத்துணை வேறுபாடுகள்!
‘சூரியன்’
என்றால் கிழக்கில் உதிக்கும்என்று அவர் எண்ணுகையில், மேற்கில்
மறைவதைப் பற்றிஎண்ணுகிறேன் நான். அந்தப் பதிப்பைப் பார்த்தபோதுநகர்வலம் சென்று
வந்ததைப் பற்றிக் கூறிய தர்மரும்,துரியோதனனும் தான் என் நினைவிற்கு வந்தனர்.
இவரின் இரு தலைப்பிலான கவிதைகளை
இணைத்துஒன்றைக் கூற விரும்புகின்றேன்.”கணினி” என்னும்கவிதையில்,
“தொலைந்து போன காதலி தன்
துணையுடன் மலர் சிரிப்பாள்-
நான் பிசைந்து போனமனதுடன்
பிக்காசாவில்” என்கிறார்.
‘கணவன்’ எனும்
கவிதையில்,
“அவள் காதலியாய்
இருக்கும் போது
கனம் தெரிவதில்லை...
மனைவியான பிறகு
மற்றெதுவும் கனமாக இல்லை”
-என்கிறார் .
ஐயா! மனைவி மட்டுமே எடை கூடிவிட்டதாக எண்ணிக்கொண்டு காதலிகளை என்றும் பதினாறாக நினைத்துக்
கொண்டிருக்கும் கணவன்மார்களின் கற்பனைகளை உடைத்தெறிந்த, கணினிக்குக் காணிக்கையாக்குகிறோம்
நன்றிகளை மனைவிமார்கள்சார்பாக.
தங்களின் இந்தக் கவிதைப் பயணம்இனிதாய்த்
தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனைவேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்”
-நன்றி-
அன்புடன்,
ஸ்வர்ணா சபரிக் குமார்,
மஸ்கட்.
No comments:
Post a Comment